உயர்வு தரும் சனி பகவான்
ஒருவருக்கு உற்றார் பெற்றாரின் பந்தமோ அல்லது சம்பந்தமோ ஏற்பட வில்லை என்றாலும், உன்னத சனியின் உறவு ஒருவருக்கு அமைந்துவிட வேண்டும், சர்வேஸ்வரரின் கடாக்ஷம்(அருள்) ஒருவருக்கு அமையவில்ல யென்றாலும், சனீஸ்வரரின் கடாக்ஷம் ஒரு ஜாதகருக்கு அமைந்துவிட வேண்டும், அப்படி அமைந்துவிட்டால் அச்சாதகருக்கு தீர்க்க ஆயுள், நிறைந்த் செல்வம், வாகன விருத்தி, அளவில்லா சொத்துக்களின் சேர்க்கை போன்ற அனைத்து ஐஸ்வர்யங்களும் தானாகவே வந்து அமைந்துவிடும் என புலிப்பாணி மகாமுனிவர் தனது பாடலில் கூறியுள்ளார். நவகிரகங்களிள் சனி ஒருவருக்குத்தான் வல்லமை மிக அதிகம், அது எவ்வாறு என்றால், கிரகங்களிலே சனீஸ்வரர் ஒருவருக்குத்தான் 'ஈஸ்வர பட்டம்' உண்டு. அவருடைய கட்டளைக்கு மூன்று உலகங்களும் கட்டுப்பட்டு இருக்கும். ஈஸ்வரன் என்றாலே சர்வவியாபகன் என்று பொருள்.
'ஈஸ்வர' பட்டத்தைப் பெற்ற அனைவருமே சதா சிவ வழிபாட்டை பின்பற்றுபவர்கள். தெய்வங்களிலே சர்வேஸ்வரன் சதா சிவ வழிபாட்டை ஏற்று மௌன நிலையை அடைகிறான் அப்பொழுது சித்தம் சிவமாகின்றது. அதப்போலவே, கிரகங்களில் சனீஸ்வரர் சர்வேஸ்வரரை வழிபட்டதால் ஈஸ்வரப் பட்டத்தைப் பெற்றார்.
சனிபகவான் பொதுவாக பலவற்றிற்குக் காரகனாக அமைந்துள்ளார். ஒரு ஜீவாத்மா இந்த பூலோகத்திலே வந்து ஜனிக்கும் பொழுது, அதன் ஆயுளை நிர்ணயிக்ககூடிய தன்மை சனி பகவானுக்கே உண்டு, ஒருவனுடைய ஜாதகத்தில் சனி பலவீனம் அடைந்திருந்தால் அவனுக்கு பூரண ஆயுள் அமையமுடியாது.
சனி பலம் பெற்றிருக்கும் ஜாதகர் பழையஇரும்பு வியாபரம் செய்பவராக இருந்தாலும் அதில் அபரிமிதலாபத்தை அடைவார், அதைப்போன்று பெட்டிக் கடை நடத்துபவரானாலும், துனி வியாபரம் செய்பரானாலும், அடுப்பு எரிக்கும் கரிவியாபரியானலும், கம்மங்க்கூழ் விற்பவரானலும் சனியின் அருளால் நல்ல லாபத்தை அடைவார். ஒருவருடைய ஜாதகத்தில் சனி பலம் பெற்றிருந்தால் அவர் எந்த தொழில் செய்தாலும் நல்ல வருமானம் ஈட்டுவார்.
ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் பலவீனப்பட்டிருந்தால், அந்த ஜாதகர் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவராக அமைய முடியாது. அந்த ஜாதகருக்கு சித்தபிரம்மை, பித்தரோகம், நீரிழிவு நோய், உடலில் ஊனம் ஏற்படுவது போன்றவைகள் ஏற்படும் என்று புலிப்பாணி மகாமுனிவர் கூறுகிறார்.
உங்கள்
ஜாதகத்தில் சனி பகவான் எந்த ஸ்தானத்தில் அமைந்துள்ளார் என்பதைக் கண்டு
அறியவும். சனி பகவான் பலவீனப்பட்டு இருப்பவர்கள், ஏழரைச்சனி பாதிப்பு,
அஷ்டம சனி பாதிப்பு உள்ளவர்கள் இனிமேலும் பாதிப்புகள், விபத்துகள்
ஏற்படாமலிருக்க உரிய பரிகாரங்கள் செய்துகொள்ளலாம்.
Sani peyarchi palan for mesham, mesam, Sani peyarchi palan for rishabam, risabam, Sani peyarchi palan for mithunam, Sani peyarchi palan for kadagam, Sani peyarchi palan for simmam, Sani peyarchi palan for kanni, Sani peyarchi palan for thulaam, Sani peyarchi palan for viruchigam, Sani peyarchi palan for dhanusu, Sani peyarchi palan for magaram, Sani peyarchi palan for kumbam, Sani peyarchi palan for meenam.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.