ராசி : மேஷம்
நட்சத்திரம்: அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய
அதிஷ்ட கல்: பவளம்
அதிஷ்ட வண்ணம்: சிகப்பு
அதிஷ்ட எண் : 1, 3, 9
அதிஷ்ட திசை : தெற்கு
குரு பெயர்ச்சி பலன் - மேஷம் ராசி:
மனஉறுதியுடன் செயலாற்றி வெற்றி வாகை சூடும் மேஷ ராசி அன்பர்களே!
இது
வரை ஐந்தாம் வீட்டில் இருந்த குருபகவான் இவ்வருடம் ஆறாம் பாவமான
அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும்
பாவத்திற்கு வருகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும்
என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. உங்க ராசிக்கு
பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு 6 ல் வருவது ஒரு வகையில்
நன்மையே. அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம்
முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம். இது வரை படித்து வேலையில்லாமல்
இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அஷ்டமத்து சனியால் இது வரை
தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நல்லவிதத்தில் நடக்கும்.திறமை அறிவுக்கு
ஏற்ற அதிகமான வருமானங்கள் வரும் ஆனால் சுபவிரயமும் அதிகரிக்கும். உடல்
ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
12
ஆம் பாவத்தை அந்த பாவாதிபதியே குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும்
.பிசியாக உழைத்து ஊர் ஊராக சுற்ற வேண்டியிருக்கும்.தேவைகேற்ற பணம்
வந்தாலும் கையில் காசு பணம் தங்காது. சுபவிரயமாக மாற்ற வீடு, மனை வாங்கும்
வாய்ப்பும் வரும். வருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விசயத்தில் செலவு செய்ய
நேரிடும். உற்றார் உறவினர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது. இது வரை
தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும்.
தாங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தை தனகாரகன் குருவே அந்த ஸ்தானத்தை பார்ப்பதால்
குடும்பத்தில் அமைதி நிலவும். அஷ்டமத்து சனியால் கருத்து வேறுபாட்டால்
பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள். சிலருக்கு கோர்ட் வரை சென்ற
வழக்குகள் சாதகமாகும். வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம்.குடும்ப
தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட
இடத்தில் பணம் கிடைக்கும். மொத்தத்தில் 60 சதவிகிதம் நன்மைகள் நடக்கும்.
குரு பெயர்ச்சி பரிகாரம் – மேஷ ராசி:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்;
முருகப்
பெருமான் வழிபாடு சிறப்பான பலனைத் தரும். அறுபடை வீடுகள், வயலூர்,
குன்றக்குடி, விராலிமலை, திருத்துறைப் பூண்டி, வடபழனி, எட்டுக்குடி போன்ற
முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களை வழிபட்டு வரலாம். கார்த்திகை
விரதம், கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளலாம். வைகாசி விசாகத் தன்று முருகனை
தரிசனம் செய்யலாம். முருகனைப் போன்றே வீரியமுள்ள வீரபுத்திரர்,
கருப்பசாமி, மாடசாமி, வனக்காளி, பத்ரகாளி போன்ற தெய்வங்களை வழிபட்டு
வருவதும்; நன்மை தரும்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !
ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்.
மேஷம்
ராசி குரு பெயர்ச்சி பலன்கள், மேஷம் ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி
பலன்கள் மேஷம் ராசி, mesham Rasi, Gurupeyarchi palangal 2016-17 mesham
Rasi, குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 மேஷம் ராசி, Guru Peyarchi Plalangal
2016-17 for mesham Rasi Aries, Jupiter Transit 2016–17 for Aries, Guru
Peyarchi Plalangal 2016-17 for mesham Rasi (Aries), குரு
பெயர்ச்சிபலன்கள் 2016-17 மேஷம் ராசி, Astrology for mesham Rasi (Aries),
Chinese astrology for mesham Rasi (Aries), daily rasipalan for mesham
Rasi, daily astrology for mesham Rasi (Aries), rashi and
nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, astrological
signs for mesham Rasi (Aries), astrology compatibility for mesham Rasi
(Aries), astrologer for mesham Rasi (Aries), love astrology for mesham
Rasi (Aries), birth astrology for mesham Rasi (Aries), astrology
horoscopes for mesham Rasi (Aries), Free daily horoscopes for mesham
Rasi (Aries), weekly horoscopes for mesham Rasi (Aries), monthly
horoscopes for mesham Rasi (Aries), Chinese horoscopes for mesham Rasi
(Aries), love astrology for mesham Rasi (Aries), tarot reading for
mesham Rasi (Aries), numerology for mesham Rasi (Aries), lucky number
for mesham Rasi Rasi, Gemstone for mesham Rasi (Aries), lucky color for
mesham Rasi (Aries), business for mesham Rasi (Aries)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.