sani-peyarchi-predictions-palangal-2017-2018-2019-2020-dhanusu-sagittarius-moolam-puradam-uthiradam


  • ராசி : தனுசு
  • நட்சத்திரம் : மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
  • அதிஷ்ட கல் : கனக புஷ்பராகம்
  • அதிஷ்ட வண்ணம் : மஞ்சள்
  • அதிஷ்ட எண் : 1, 8, 9
  • அதிஷ்ட திசை  : வடக்கு
பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் தனுசு ராசி அன்பர்களே!
தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர் நீங்கள். கடந்த ஓரு வருஷமாக பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் ஆடி மாதம் முதல் பத்தாம் பாவமான தொழில், கங்கா ஸ்தானம், மாமியார் வீடு கர்மா ஸ்தானம் என்ற இடத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார்.ராசிநாதன் சனி கோசாரத்தில் பத்தில் வந்தால் பாதகமா?. சாதகமா?. என்றால் 9 ல் இருந்த சனி சாதகமான நன்மைகளை செய்தார் என்றால் 75 சதவிதம் பேர் நன்மைகளை அடைந்து இருப்பார்கள். கோசாரத்தில் ஏழரை சனி இருப்பதால் கடந்த காலங்களில் ஏமாற்றம் சஞ்சலம் விரக்தி வேதனை அனுபவித்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி சாதகமாக நல்ல பலனை தரும். சனி பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள். ஜாதகத்தில் தனகாரகன் சனி தனஸ்தானத்திற்கு 9 ல் வருகிறார். சனிவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார்.குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொல்லும் செயலும் நிறைவேறும்.

இது வரை கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றி விடலாம்.பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள்.வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும். தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார். தாயார் வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகமும்,ரொம்ப நாளாக வாட்டி வதைத்த நோய் நொடிகள் நீங்கி நலமும் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். தன்னுடைய 9 ஆம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். கடன்கள் கோர்ட் வழக்குகள் முற்றிலும் அகலும். புது முயற்சிகள் கை கூடும்.தொழில் அபிவிருத்தி ஏற்படும்.செய் தொழில் வளர்ச்சி பெறும் 60 சதவிதம் நன்மையே நடைபெறும்.

சனி பெயர்ச்சி பரிகாரம் – தனுசு ராசி

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ;
சனி வடிவமாக  விளங்கும் திருச்செந்தூர் செந்திலாண்டவன் தரிசனம் சிறப்பு தரும். இறைவன் சனி வடிவமாக அருள்பாலிக்கும் திரு ஆலங்குடி மற்றும் தேனி மாவட்டம் குச்சனூர் வட சனிபலவான் தரிசனமும் சிறப்பு தரும். சுவாமிமலை முருகன் தரிசனம் அவசியம் மஹாங்களின் தரிசனமும், ஆசி பெறுதலும் வாழ்வில் உயர்வைத் தரும். இராமேஸ்வரம் இராமநாதசுவாமியை தரிசித்து தீர்த்த நீராடி வரவேண்டும். கும்பகோணம் கும்பேஸ்வரர், திருமயிலை கபாலீஸ்வரர் தரிசனமும் சிறப்பு தரும்.

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

     “ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம”

********************
தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள், தனுசு ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி, Thanusu Rasi sanipeyarchi palangal 2016-17, சனி பெயர்ச்சிபலன்கள் 2016-17 தனுசு ராசி Pisces, sani Peyarchi Plalangal 2016-17 for Thanusu sagittarius, Jupiter Transit 2016–17 for Thanusu (sagittarius), sani Peyarchi Plalangal 2016-17 for Thanusu (sagittarius), சனி பெயர்ச்சிபலன்கள் 2016-17 தனுசும் ராசி, Astrology for Thanusu (sagittarius), Chinese astrology for Thanusu (sagittarius), daily rasipalan for Thanusu Rasi, daily astrology for Thanusu (sagittarius), astrological signs for Thanusu (sagittarius), astrology compatibility for Thanusu (sagittarius), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, astrologer for Thanusu (sagittarius), love astrology for Thanusu (sagittarius), birth astrology for Thanusu (sagittarius), astrology horoscopes for Thanusu (sagittarius), Free daily horoscopes for Thanusu (sagittarius), weekly horoscopes for Thanusu (sagittarius), monthly horoscopes for Thanusu (sagittarius), Chinese horoscopes for Thanusu (sagittarius), love astrology for Thanusu (sagittarius), tarot reading for Thanusu (sagittarius), numerology for Thanusu (sagittarius), lucky number for Thanusu Rasi, Gemstone for Thanusu (sagittarius), lucky color for Thanusu (sagittarius), business for Thanusu (sagittarius)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Best astrologers in salem - Famous Astrologers in salem - Astrology Experts..

Murugu Astrology Centre offers various services in Astrology, Marriage matching, Vedic Astrology, Astrology Reading, Psychic Readings, Dash...