மாதா
மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் புரட்டாசி அமாவாசை மிகவும் விசேஷமானது. இதனை மகாளய அமாவாசை என்பர். இந்த காலத்தில் சில வருணத்தார் திருமணம்
போன்ற எந்த சுப காரியத்தையும் செய்ய மாட்டார். ஏனென்றால் இந்த காலப் பகுதி
முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது. சிரார்தம்
என்று கூறுவார்கள் அல்லவா, அதுபோல் திதி கொடுப்பது, தான, தர்மங்கள்
செய்வது, பங்காளிகளுக்கு இடையிலான பிரச்சனைகளைத் தீர்ப்பது, அதாவது சொத்து
உள்ளிட்ட பிரச்சனைகளில் உள்ள வில்லங்கங்களைத் தீர்த்துக் கொள்கிற காலம்தான்
இந்த மகாளய பட்சம் என்பது. இதன் உச்சதான் மகாளய அமாவாசை ஆகும்.
மற்ற
அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது
அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதாலோ தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசை
தினத்தன்று திதி கொடுத்தால் அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க
வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து
செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த
பாவங்கில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு
செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில்
நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.